இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 March 2025 12:42 PM IST
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடல்நலக்குறைவு மற்றும் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்சில் மார்ச்-9ல் அனுமதிக்கப்பட்டார்.
- 12 March 2025 12:34 PM IST
பாகிஸ்தான்: கிளர்ச்சிப் படையால் கடத்தப்பட்ட ஜாபர் விரைவு ரெயிலில் இருந்து 155 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலூச் விடுதலைப் படையைச் சேர்ந்த 27 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். 400க்கும் மேற்பட்டோருடன் சென்ற ரெயிலை நேற்று கடத்தியது பலூச் விடுதலைப் படை.
- 12 March 2025 12:00 PM IST
இந்தியாவிலேயே கட்சித் தலைவராக பொறுப்பு ஏற்ற பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதல-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 12 March 2025 11:52 AM IST
தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 12 March 2025 11:12 AM IST
நெல்லை, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 12 March 2025 11:11 AM IST
தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை தமிழ்நாடு குழு சந்தித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத்தலைவர் பல்லா சீனிவாசராவையும் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பான தென்மாநில அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
- 12 March 2025 11:02 AM IST
டிரம்ப் வாங்கிய புதிய டெஸ்லா காருடன் எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப்.
- 12 March 2025 10:53 AM IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,520க்கும், ஒரு கிராம் ரூ.8,065க்கும் விற்பனை ஆகிறது.
- 12 March 2025 10:52 AM IST
மறைந்த நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல கொலை என்று ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவரின் புகாரால் சர்ச்சை எழுந்துள்ளது.
- 12 March 2025 10:50 AM IST
கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.







