இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025


தினத்தந்தி 12 Nov 2025 9:00 AM IST (Updated: 13 Nov 2025 8:48 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • டெல்லி கார் வெடிப்பு -  பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்
    12 Nov 2025 5:58 PM IST

    டெல்லி கார் வெடிப்பு - பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்

    டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த உளவுத்துறை அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். செங்கோட்டை கார் வெடிப்பு சம்பத்தை அடுத்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூடியுள்ளது.

  • டெல்லி கார் வெடிப்பு - காரை தேடும் போலீசார்
    12 Nov 2025 5:47 PM IST

    டெல்லி கார் வெடிப்பு - காரை தேடும் போலீசார்

    டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபரின் காரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிகப்பு நிற ஃபோர்டு காரில் இருந்தவர்களுக்கும் சம்பவத்தில் தொடர்பு என விசாரணையில் தெரியவந்துள்ளது. தனிப்படைகள் அமைத்து உ.பி, அரியானா மாநில எல்லைகளிலும் மற்றொரு காரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • பாலியல் வழக்கு - ஆயுள் தண்டனை
    12 Nov 2025 5:46 PM IST

    பாலியல் வழக்கு - ஆயுள் தண்டனை

    புதுக்கோட்டை அருகே 8ம் வகுப்பு மாணவி கடந்த 2023ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ராஜேந்திரன் என்பவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் மற்றொரு பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  • தங்க மோதிரத்திற்காக மூதாட்டி கொலை
    12 Nov 2025 5:44 PM IST

    தங்க மோதிரத்திற்காக மூதாட்டி கொலை

    கோவை, வளையபாளையத்தில் 80 வயது மூதாட்டி அருகாணி அம்மாள் கொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டி அணிந்திருந்த தங்க மோதிரத்திற்காக கோபாலகிருஷ்ணன் என்ற 65 வயது நபர் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. முதியவரை கைது செய்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
    12 Nov 2025 5:42 PM IST

    பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

    ஈரோட்டில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.

  • திமுக மீது தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர் - அன்புமணி
    12 Nov 2025 5:38 PM IST

    திமுக மீது தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர் - அன்புமணி

    திமுக மீது தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். என்னுடைய 100 நாள் நடைபயணத்தில் அதனை மக்களிடம் நேரில் பார்த்தேன். அலையாக வீசும் மக்களின் கோபம் இன்னும் 3 மாதத்தில் சுனாமியாக மாறி திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்றும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

  • 12 Nov 2025 5:37 PM IST

    ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை

    கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம். சென்னை கவர்னர் மாளிகை முன் 2023ஆம் ஆண்டில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார்.

  • டிச.5ம் தேதி இந்தியா வருகிறார் புதின்
    12 Nov 2025 5:35 PM IST

    டிச.5ம் தேதி இந்தியா வருகிறார் புதின்

    ரஷிய அதிபர் புதின் வரும் டிச.5ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் உடனான போர் தொடங்கிய பிறகு, புதினின் முதல் இந்திய பயணம் இதுவென்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடைசியாக 2021 டிசம்பர் மாதம், அவர் இந்தியா வந்திருந்ததார்.

  • தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கல்
    12 Nov 2025 5:33 PM IST

    தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கல்

    தமிழ்நாட்டில் இன்று மதியம் 3 மணி வரை 78.09 சதவீதம் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 5 கோடி வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
    12 Nov 2025 4:45 PM IST

    தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    பூம்புகார் பகுதியை சேர்ந்த 14 மீனவர்கள் படகில் ஏற்பட்டுள்ள பழுதால் திசை மாறி வந்துவிட்டோம், எங்களுக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை ஒதுக்கி சட்டவிரோதமாக தமிழ்நாட்டு மீனவர்களை சிறையில் அடைத்துள்ளது இலங்கை கடற்படை. இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவரமத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

1 More update

Next Story