இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Nov 2025 1:16 PM IST
பிரபல பாடகி சின்மயி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
பாடகி சின்மயி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
- 12 Nov 2025 1:14 PM IST
அமெரிக்காவில் திறமையானவர்கள் இல்லை என கூறிய டிரம்ப்.. திடீர் மாறுதலுக்கு என்ன காரணம்..?
வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கூறி இருந்தார்.
- 12 Nov 2025 1:12 PM IST
பவளவிழா பாப்பா.. நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா.. விஜய் கடும் தாக்கு
அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி என திமுகவை விஜய் மறைமுகமாக சாடியுள்ளார்.
- 12 Nov 2025 1:05 PM IST
திருச்சியில் அமைச்சர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வீடு மற்றும் அலுவலகம் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டிற்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியானது. மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 12 Nov 2025 1:01 PM IST
மோடி எங்கள் டாடி... என மீண்டும் கூறிய ராஜேந்திர பாலாஜி
சிவகாசியில் புதிய ரெயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி பெற்றது அதிமுக ஆட்சியில் தான். மத்திய அரசில் இருப்பது உங்கள் ஐயா இல்ல. எங்கள் ஐயா. மோடி எங்கள் டாடி தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
- 12 Nov 2025 12:58 PM IST
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?
இன்று (12-11-2025): தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- 12 Nov 2025 12:43 PM IST
கடந்த ஏப்ரல் முதல் 342 வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துள்ள மர்ம நபர்கள்
கடந்த ஏப்ரல் முதல் 342 வெடிகுண்டு மிரட்டல் இமெயில்கள் வந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்துமே தீவிரமாக விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், Dark Web ப்ரவுசர்கள் மூலம் இந்த மெயில்கள் அனுப்பப்படுவதால் மர்ம நபர்களை கண்டறிவதில் சிரமம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
- 12 Nov 2025 12:41 PM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்;, சிறப்புக் குழுவை அமைத்தது என்ஐஏ
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை விசாரிக்க, ஏடிஜி விஜய் சாகரே தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தது என்ஐஏ. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்துகிறது என்ஐஏ
- 12 Nov 2025 12:18 PM IST
டிசம்பர் 16ம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
டிசம்பர் 16-ம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி நிரந்தரம், கால முறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12 Nov 2025 12:08 PM IST
யுபிஎஸ்சி மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு; தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்
* 2025ம் ஆண்டு யுபிஎஸ்சி பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97 சதவீத அதிகரிப்பு.
* தமிழ்நாட்டில் இருந்து கடந்தாண்டு 136 பேர் பிரதானத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 155 பேர் தேர்ச்சி.
*அதேவேளையில், 2024ல் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 48ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 85ஆக அதிகரித்துள்ளது.
* தமிழ்நாட்டில் இருந்து இந்தாண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களில், 54.84 சதவீத பேர் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள், இது கடந்தாண்டு 35.29 சதவீதஆக இருந்தது.
* 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி பிரதானத் தேர்வில் நாடு முழுவதும் 2,736 பேர் தேர்வாகியுள்ள நிலையில், அவர்கள் அடுத்தக்கட்டமாக நேர்முகத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.


















