இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Dec 2025 12:42 PM IST
ஒடிசா: வகுப்பில் துப்பாக்கியை நீட்டி தலைமை ஆசிரியரை மிரட்டிய 14 வயது மாணவன்
மாணவன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு செய்து வந்திருக்கிறான் என்றும் கூறப்படுகிறது. இதனால், சிறுவனை அழைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சத்தம் போட்டுள்ளனர். அப்போது, அந்த சிறுவன் திடீரென பையில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காட்டி, சுட்டு விடுவேன் என தலைமை ஆசிரியரையே மிரட்டியிருக்கிறான்.
- 14 Dec 2025 12:40 PM IST
த.வெ.க. விருப்பமனு தேதியை விஜய் அறிவிப்பார்: செங்கோட்டையன் பேட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது என செங்கோட்டையன் பேட்டியில் கூறியுள்ளார்.
- 14 Dec 2025 12:12 PM IST
ராமதாஸ் தலைமையில் 17ம் தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம்
ராமதாஸ் தலைமையில் 17ம் தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
- 14 Dec 2025 12:10 PM IST
வகுப்பறையில் அமர்ந்து மது அருந்திய மாணவிகள்: ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
மதுப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 14 Dec 2025 12:09 PM IST
அரியானா: கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய பஸ்கள் - பலர் காயம்
அரியானாவின் ரிவாரி மாவட்டத்திற்கும் சஜ்ஜர் மாவட்டத்திற்கும் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. காலை கடுமையான பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமின்மையால் சாலையில் சென்ற பஸ்கள் ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
- 14 Dec 2025 11:25 AM IST
த.வெ.க. திருச்செங்கோடு வேட்பாளர் இன்று அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு?
ஜனவரி தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார் என தகவல் வெளியானது.
- 14 Dec 2025 11:23 AM IST
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்: மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் மோத உள்ளன. துபாயில் இன்று காலை 10.30 மணிக்கு ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் துபாயில் மழை பெய்து வருகிறது. இதனால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
- 14 Dec 2025 11:22 AM IST
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விபத்து; இந்தியர் உள்பட 4 பேர் பலி
கட்டுமான பணியின்போது திடீரென கோவில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், பக்தர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதில் விக்கி ஜெய்ராஜ் என்ற இந்தியரும் அடக்கம். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் ஒரு நபர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- 14 Dec 2025 11:18 AM IST
“மலை நகரில் மாலை சந்திப்போம்..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.
- 14 Dec 2025 10:40 AM IST
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை
கடலோர தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
















