இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Dec 2025 10:38 AM IST
உலகக் கோப்பை ஸ்குவாஷ்: எகிப்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எகிப்துக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- 14 Dec 2025 10:37 AM IST
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதுகின்றன. துபாயில் இன்று காலை 10.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஆயூஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி பர்ஹான் யூசுப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
- 14 Dec 2025 10:36 AM IST
3-வது டி20: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
- 14 Dec 2025 10:34 AM IST
கன்னியாகுமரியில் ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து - 40 பேர் காயம்
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலைத்தடுப்பில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் 40 பேர் காயமடைந்தனர்.
- 14 Dec 2025 10:32 AM IST
மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி; 59 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதி வாய்ந்த ஒரு வாக்காளர் நீக்கப்பட்டால் கூட தர்ணா போராட்டம் நடத்தப்படும் என மம்தா பானர்ஜி கூறினார்.
- 14 Dec 2025 10:31 AM IST
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை; டிரம்ப் சூளுரை
எங்கள் மீதும், சிரியா மீதும் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடுத்த தாக்குதல் இது என டிரம்ப் வெள்ளை மாளிகையில் கூறினார்.
- 14 Dec 2025 10:29 AM IST
காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
காசா முனையில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி ரயிட் சயத் கொல்லப்பட்டார். மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி ரயிட் சயத் 2023 அக்டோபர் 7ம் தேதி நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- 14 Dec 2025 10:27 AM IST
அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்
அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் பள்ளிகளில் 70-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
- 14 Dec 2025 10:25 AM IST
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற காலக்கெடு இன்றுடன் நிறைவு
உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்த்தால் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 14 Dec 2025 10:23 AM IST
தோல்வியுடன் விடைபெற்றார் ஜான் சீனா
அடுத்த கட்டமாக ஜான் சீனா தனது முழு கவனத்தையும் சினிமா துறையில் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
















