இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 15 May 2025 1:15 PM IST
கடலூர் சிப்காட்டில் சாயப்பட்டறை தொழிற்சாலையில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்துக்குள்ளானது. தரையில் படிந்து கிடக்கும் ரசாயன கழிவுகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்ட எஸ்.பி., சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார். மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- 15 May 2025 1:05 PM IST
பாமக மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
- 15 May 2025 12:41 PM IST
கவர்னர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி வழியே விளக்கம் கேட்டுள்ள மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதிலும் முழு பலத்தோடு போராடுவோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 15 May 2025 12:09 PM IST
தமிழ்நாட்டின் நீர்ப்பாசன தந்தை என அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டனின் 223வது பிறந்த தினத்தை ஒட்டி, கொள்ளிடம் ஆற்றில் அவரது புகைப்படத்திற்கு விவசாயிகள் மரியாதை செய்தனர். பிரிட்டிஷ் பொறியாளரான சர் ஆர்தர் காட்டன், முக்கொம்பு மேலணை, கொள்ளிடம் கீழணை ஆகியவற்றை கட்டினார். கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையையும் புதுப்பித்தார்.
- 15 May 2025 12:07 PM IST
கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே தாண்டியத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- 15 May 2025 11:25 AM IST
கர்னல் சோபியா குரோஷி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் பாஜக மந்திரிக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சராக இருக்கும் ஒருவர் பொறுப்பற்ற முறையில் கருத்து கூறக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
- 15 May 2025 11:11 AM IST
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் ரிலையன்ஸ் நிறுவன இயக்குநர் முகேஷ் அம்பானி நேற்று (மே14) தோஹாவில் சந்தித்தார்.
- 15 May 2025 11:07 AM IST
டெல்லியில் உள்ள குரு கோவிந்த் சிங் கல்லூரி நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- 15 May 2025 11:04 AM IST
உதகை மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உதகையில் 127ஆவது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தாவரவியல் பூங்காவில் கண்காட்சியை தொடங்கி வைத்து மலர் அலங்காரங்களை பார்வையிட்டார். கோடை விடுமுறையை ஒட்டி உதகையில் மலர் கண்காட்சி 11 நாட்களுக்கு நடைபெறுகிறது.
- 15 May 2025 10:45 AM IST
ஆபரேசன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக இன்று (மே.15) ஜம்மு காஷ்மீர் செல்கிறார் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்.











