இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 15 Nov 2025 9:11 AM IST
பீகாரில் மோசமான தோல்வியை சந்தித்த காங்கிரஸ்.. ராகுலின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு என்னவானது..?
பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்து இருக்கிறது.
- 15 Nov 2025 9:08 AM IST
பீகார் சட்டசபை தேர்தல்: தே.ஜ. கூட்டணி இமாலய வெற்றி.. பா.ஜ.க.வுக்கு முதல்-மந்திரி பதவி?
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அசுர பலத்துடன் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை தக்கவைத்தது.
- 15 Nov 2025 9:07 AM IST
ராசிபலன் (15.11.2025): புதிய முயற்சிகள் வெற்றி அடையும் நாள்..!
ரிஷபம்
வியாபாரத்தில் லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அவசியம் வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் சுய உதவிக்குழுவில் தலைமை தாங்குவர். குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சில சமயம் தங்கள் சகோதரர் உதவுவார்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை









