இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 Dec 2025 8:50 AM IST
நாளை மறுநாள் ஈரோட்டில் விஜய் பிரசார கூட்டம்.. மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
நாளை மறுநாள் நடைபெறும் விஜய் பிரசார கூட்டத்துக்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- 16 Dec 2025 8:49 AM IST
இன்று ஐ.பி.எல். கிரிக்கெட் மினி ஏலம்
தரமான ஆல்-ரவுண்டரான கேமரூன் கிரீனை தட்டித்தூக்க கொல்கத்தா, சென்னை அணிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அவரது விலை ரூ.25 கோடிக்கு மேல் எகிறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
- 16 Dec 2025 8:47 AM IST
பிரதமர் மோடி ஜனவரியில் தமிழகம் வருகை
பிரதமர் மோடியின் தமிழக பயணத்திற்கான தேதியை இறுதி செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.
- 16 Dec 2025 8:46 AM IST
இன்றைய ராசிபலன் (16-12-2025): நீண்ட கால கனவு நனவாகும் நாள்..!
கன்னி
இன்று பணப் பிரச்சினை இருக்காது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். ஆசிரியர்களுக்கு மதிப்பு கூடும். பார்ப்பதற்கு நீங்கள் கரடுமுரடானவராகத் தெரிந்தாலும் உண்மையில் உங்களிடம் உதவிபுரியும் குணம் அதிகம்தான். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா










