இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...17-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 17 May 2025 9:05 AM IST
திருவள்ளூர்: ஆரணியில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சந்திரகுமார் என்பவரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய குடும்பத்தினர். சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் மற்றும் தோல் போன்ற உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கவுள்ளன.
- 17 May 2025 9:05 AM IST
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றன. சேவூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரனின் 2 வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
- 17 May 2025 9:04 AM IST
வேளச்சேரி- சென்னை கடற்கரை மின்சார ரெயில் இன்று ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி மார்க்கத்தில் இன்று மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இன்று இரவு 10 மணி முதல் மே 18 காலை 8 மணி வரை மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. வேளச்சேரி- சென்னை மார்க்கத்தில் இன்று 4 ரெயில்களும், நாளை 13 ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
- 17 May 2025 9:03 AM IST
முதல் முறையாக 90 மீ. தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா
ஈட்டி எறிதல் போட்டியில் முதல் முறையாக 90 மீட்டர் தூரத்தை கடந்தார் நீரஜ் சோப்ரா. கத்தாரில் நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்தார் நீரஜ் சோப்ரா.
- 17 May 2025 9:02 AM IST
ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும் 2வது நாளாக சோதனை தொடருகிறது.










