இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
x
தினத்தந்தி 18 Oct 2025 9:36 AM IST (Updated: 18 Oct 2025 8:20 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 18 Oct 2025 9:58 AM IST

    நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல்.. திடீரென சரிந்த தங்கம் விலை..!


    தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.2,400 அதிரடியாக உயர்ந்த நிலையில், ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியது.


  • 18 Oct 2025 9:57 AM IST

    புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு


    தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்து புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 18 Oct 2025 9:56 AM IST

    ராசிபலன் (18-10-2025): எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் - எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா..?


    ரிஷபம்

    எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். திருமணம் கோலாகலமாக நடக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.தேகம் பளிச்சிடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: பச்சை

  • அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
    18 Oct 2025 9:40 AM IST

    அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே இன்று (18-10-2025) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • 18 Oct 2025 9:38 AM IST

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இதன்படி இன்று(18-10-2025) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும்நிலையில், இன்றும் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story