இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-10-2025


தினத்தந்தி 2 Oct 2025 9:25 AM IST (Updated: 3 Oct 2025 9:03 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • உலகின் சிறந்த அரசுப்பள்ளி
    2 Oct 2025 11:33 AM IST

    உலகின் சிறந்த அரசுப்பள்ளி

    உலகின் சிறந்த பள்ளிக்கான(2025) விருதுக்கு, மராட்டிய மாநிலம் கேட் தாலுகாவில் உள்ள ஜலிந்தர் நகர அரசு ஆரம்ப பள்ளி தேர்வு பெற்றுள்ளது. இசைவான அமைப்பு என்ற புதிய முறையில் மாணவர்களே ஒருவருக்கொருவர் ஆசிரியராகவும் கற்பவராகவும் மாறுகின்றனர். இதன் மூலம் வயது வேறுபாடின்றி இணைந்து கற்பது மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துவதாக விருது வழங்கும் அமைப்பு கூறியுள்ளது.

  • புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    2 Oct 2025 11:30 AM IST

    புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    மத்திய வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

  • நிவாரண கப்பல் தடுத்து நிறுத்தம்
    2 Oct 2025 11:28 AM IST

    நிவாரண கப்பல் தடுத்து நிறுத்தம்

    காசாவிற்கு நிவாரண பொருட்களை எடுத்து சென்ற சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்பாவி மக்களுக்கான நிவாரண கப்பலை தடுத்து இஸ்ரேல் படைகள் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் குற்றம்சாட்டி உள்ளது.

  • குலசை தசரா - சிறப்பு ரெயில்கள்
    2 Oct 2025 11:24 AM IST

    குலசை தசரா - சிறப்பு ரெயில்கள்

    குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்காக நெல்லை - திருச்செந்தூர் இடையே இன்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நெல்லைக்கு இரவு 10.30 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திருச்செந்தூருக்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தடையும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

  • ஆதார் இணைத்தால் மட்டுமே டிக்கெட்
    2 Oct 2025 11:22 AM IST

    ஆதார் இணைத்தால் மட்டுமே டிக்கெட்

    இன்று முதல் IRCTC ஆப்பில் ஆதார் இணைக்க வேண்டும். இது நாடு முழுவதும் இன்றிலிருந்து அமலுக்கு வந்தது. அவ்வாறு ஆதார் இணைத்தால் மட்டுமே உள்ளே நுழைந்து டிக்கெட்(பொது முன்பதிவு டிக்கெட்) எடுக்க முடியும். பயனாளிகளின் சிரமங்களை குறைக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்று தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியுள்ளார்.

  • டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன்  முதல்-அமைச்சர் ஆலோசனை
    2 Oct 2025 11:13 AM IST

    டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை

    டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். நெல் கொள்முதல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

  • விஜயின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பு
    2 Oct 2025 11:10 AM IST

    விஜயின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பு

    தவெக தலைவர் விஜயின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததா?, ஒய் பிரிவு அதிகாரிகள் எவ்வாறு செயல்பட்டனர் என பாதுகாப்பு அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

  • மகாத்மா காந்திக்கு பணிவான அஞ்சலி - எல்.முருகன்
    2 Oct 2025 11:07 AM IST

    மகாத்மா காந்திக்கு பணிவான அஞ்சலி - எல்.முருகன்

    தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் அவருக்கு பணிவான அஞ்சலி செலுத்துகிறேன். காந்தியின் உண்மை, அகிம்சை ஆகிய கொள்கைகள் மனிதகுலத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

  • ஜி.கே.மணி மகனுக்கு இளைஞரணி தலைவர் பதவி?
    2 Oct 2025 11:05 AM IST

    ஜி.கே.மணி மகனுக்கு இளைஞரணி தலைவர் பதவி?

    ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பாமக மாநில இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

  • 2 Oct 2025 10:34 AM IST

    நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    புதுச்சேரியில் நாளை (03.10.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ஆயுத பூஜை தொடர் விடுமுறையை அடுத்து நாளையும் புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story