இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Jan 2025 4:59 PM IST
திருவாரூர் மாவட்டம் காரியமங்கலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மூடப்பட்ட எரிவாயுக் கிணறுகள் நிரந்தரமாக மூடப்படும் என்று ஓஎன்ஜிசி அதிகாரி கூறியுள்ளார்.
- 20 Jan 2025 4:57 PM IST
யாசகம் எடுத்தே `ஐபோன்’வாங்கிய `பலே’ பிச்சைக்காரர்
ராஜஸ்தான்: அஜ்மீரில் தான் யாசகம் பெற்ற பணத்தை வைத்து 1.70 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐபோன் 16 ப்ரோமேக்ஸ்-ஐ வாங்கி, அதை வைத்துக் கொண்டு ஸ்டைலாக யாசகம் எடுத்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
- 20 Jan 2025 4:21 PM IST
சீனாவில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சீனாவில் இன்று 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒருவர் ஜுகாய் நகரில் உள்ள ஸ்டேடியத்திற்கு வெளியே திரண்டிருந்த மக்கள் மீது காரை ஏற்றி 35 பேரை கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர், மற்றொருவர் கத்தியால் குத்தி 8 பேரை கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர் ஆவர்.
- 20 Jan 2025 3:57 PM IST
தமிழகத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வரைவுகள் மாற்றியமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாறுபட்ட உயர்கல்வி தேவைகளுடன் சிறப்பாக ஒத்துப்போகும் வகையில், வரைவு விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
- 20 Jan 2025 3:55 PM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டது. கட்சித் தரப்பில் 'கரும்பு விவசாயி' சின்னம் கோரப்பட்ட நிலையில், அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மறுத்துவிட்டார்.
- 20 Jan 2025 3:53 PM IST
சென்னைக்கு மற்றொரு விமான நிலையம் வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னைக்கு மற்றொரு விமான நிலையம் 15 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும். பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கொடுப்போருக்கு அதிக இழப்பீடு கொடுக்கவுள்ளோம். பொருளாதார வளர்ச்சி வேண்டுமென்றால் சூழலியல் பாதிப்பு சிறியளவில் இருக்கத்தான் செய்யும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
- 20 Jan 2025 3:21 PM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 47 பேர் போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுவை திரும்பப் பெற அவகாசம் முடிந்த நிலையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டியிடுகின்றனர். தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 47 பேர் களத்தில் உள்ளனர்.
- 20 Jan 2025 2:59 PM IST
பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து சியால்டா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சிறை தண்டனையுடன் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- 20 Jan 2025 2:44 PM IST
விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் பரந்தூர் மக்களை விஜய் சந்திப்பது, அவரின் தனிப்பட்ட விருப்பம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
- 20 Jan 2025 2:17 PM IST
கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிக்கு சீல்டா நீதிமன்றம் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு தண்டனை விவரங்களை அறிவிக்கிறது.







