இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 21 Dec 2025 9:20 AM IST
இளையோர் ஆசிய கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
இந்தியா- பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்
- 21 Dec 2025 9:18 AM IST
2026 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள்: புதிய வேகமெடுக்க உள்ள இந்திய பங்குச் சந்தை..!
கிரகங்களின் கூட்டுச்சேர்க்கை, முக்கியமான விண்வெளி திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என தெரிவிக்கிறது. மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 21 Dec 2025 9:16 AM IST
சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரியிடம் குறுக்கு விசாரணை
சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சிகளிடம் நேரடியாக குறுக்கு விசாரணையை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
- 21 Dec 2025 9:15 AM IST
தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம்! - மு.க.ஸ்டாலின்
வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 21 Dec 2025 9:13 AM IST
புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் செங்கோட்டையனுடன் ஆலோசனை நடத்திய விஜய்
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் நேற்று ஆலோனை கூட்டம் நடைபெற்றது. இதில், தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன். தேர்தல் பிரிவு மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
- 21 Dec 2025 9:11 AM IST
97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
- 21 Dec 2025 9:10 AM IST
ராசிபலன் (21-12-2025): உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும் நாள்..!
கும்பம்
பழைய கடன்கள் அடைபடும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். சொந்த பிளாட். நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்













