இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 Sept 2025 5:04 PM IST
நேபாளத்தில் 4 புதிய மந்திரிகள் நியமனம்
நேபாள இடைக்கால தலைவர் சுசிலா கார்கியின் அமைச்சரவையில் 4 புதிய மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டனர். 4 புதிய மந்திரிகளுக்கு நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- 22 Sept 2025 5:02 PM IST
மின்வாரிய ஒப்பந்த ஊழியர் அடித்துக்கொலை
சேலம் - சுக்கம்பட்டியில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்த ஊழியர் சதீஷ்குமாரை, காரில் கடத்தி சென்று அடித்து கொலை செய்து ஆற்றில் வீசியது ரவுடி கும்பல். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவுடி மணிகண்டன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாரை அடித்துக் கொன்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
- 22 Sept 2025 4:59 PM IST
ஜாய் கிரிசில்டாவிடம் 4 மணி நேரமாக விசாரணை
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில் ஜாய் கிரிசில்டாவிடம் 4 மணிநேரமாக பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்பட வீடியோ ஆதாரங்கள் துணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- 22 Sept 2025 2:42 PM IST
நெய் பொருட்களுக்கு தள்ளுபடியை அறிவித்தது ஆவின்
ஜிஎஸ்டி வரி திருத்தத்தையொட்டி நெய் பொருட்கள் மீது தள்ளுபடியை அறிவித்தது ஆவின் நிறுவனம். நெய் பொருட்கள் மீதான தள்ளுபடி செப்.22 முதல் நவ.30 வரை அமலில் இருக்கும் என ஆவின் அறிவித்துள்ளது.
- 22 Sept 2025 1:29 PM IST
''காந்தாரா - சாப்டர் 1'' டிரெய்லர் - தமிழில் வெளியிட்ட சிவகார்த்திகேயன்
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா - சாப்டர் 1 படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் வெளியிட்டுள்ளார்.
- 22 Sept 2025 1:27 PM IST
15 வயதில் தேசிய விருது...6 ஆண்டுகளில் 25 படங்கள்...21 வயதில் சோகம் - யார் அந்த நடிகை தெரியுமா?
15 வயதில் திரையுலகில் நுழைந்தவர் இந்த நடிகை. குறுகிய காலத்திலேயே நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். ஆறு ஆண்டுகளில் சுமார் 25 படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். ஆனால் அவரது திரையுலக வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது, எதிர்பாராத ஒரு விபத்து அவரது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது.
- 22 Sept 2025 1:11 PM IST
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்கியது
கர்நாடகத்தின் ‘நாடஹப்பா’ என்றழைக்கப்படும் மைசூரு தசரா விழா மன்னர் காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க 415-ம் ஆண்டு தசரா விழா இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் மீது பூக்களை தூவி முக்கிய பிரபலங்கள் தொடங்கி வைப்பார்கள்.
தசரா விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) குப்பண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, மகாராஜா கல்லூரி மைதானத்தில் உணவு மேளா, மானஷ கங்கோத்ரி வளாகத்தில் மல்யுத்த போட்டிகள் தொடங்குகின்றன.
- 22 Sept 2025 12:55 PM IST
''அந்த காட்சியில் நடிக்க வற்புறுத்தினார்...அந்த இயக்குனரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்'' - நடிகை ராசி
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ராசியும் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், பின்னர் பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
- 22 Sept 2025 12:44 PM IST
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் - அமித்ஷா
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன. இந்த நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி தரும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.















