''காந்தாரா - சாப்டர் 1'' பட டிரெய்லர் வெளியானது


Kantara - Chapter 1 Trailer - Released in Tamil by Sivakarthikeyan
x
தினத்தந்தி 22 Sept 2025 1:25 PM IST (Updated: 22 Sept 2025 1:39 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ''காந்தாரா - சாப்டர் 1'' படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் வெளியிட்டுள்ளார்.

கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி 'காந்தாரா சாப்டர் 1' என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

1 More update

Next Story