இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Feb 2025 2:49 PM IST
சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாக கட்டப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
- 23 Feb 2025 2:47 PM IST
முதல் ஓவரிலேயே 5 வைடுகளை பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.
- 23 Feb 2025 2:46 PM IST
தமிழகத்தில் வரும் 25ம் தேதிக்கு பின் வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மையம் தெரிவித்துள்ளது.
- 23 Feb 2025 2:44 PM IST
சர்வதேச மகளிர் தினத்தன்று, எனது சமூக வலைத்தள கணக்குகளை நாட்டின் சில முன்மாதிரி பெண்களிடம் ஒப்படைப்பேன் என்று மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- 23 Feb 2025 2:00 PM IST
நாதக சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ‘கரையான் கூட்டத்தோடு இருந்து துரோகி ஆவதைவிட கிளையாக உடைந்து எதிரியாவதே மேல் என சபரிநாதன் கூறியுள்ளார்.
- 23 Feb 2025 11:53 AM IST
"இளைஞர்களிடையே கவலையை அதிகரிக்கும் விவகாரமாக உடல் பருமன் உள்ளது என்று ’மன்கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.






