இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
x
தினத்தந்தி 23 April 2025 8:14 AM IST (Updated: 23 April 2025 8:40 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 23 April 2025 8:31 AM IST

    'அவருடன் நடிக்க ஆசை' - கே.ஜி.எப் நடிகை

    நானி தயாரித்து நடித்திருக்கும் படம் ஹிட் 3. கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

    இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தெலுங்கில் அறிமுகமாகிறார். இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வரும்நிலையில், தற்போது படக்குழு புரமோசன் பணியில் ஈடுபட்டுள்ளது. அதில், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஷாருக்கானுடன் நடிக்க ஆசை இருப்பதாக கூறினார்

  • 23 April 2025 8:29 AM IST

    விராட் கோலிக்கு ஏன் தண்டனை வழங்கவில்லை - ஆகாஷ் சோப்ரா கேள்வி


    கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப்புக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றியை கொண்டாடிய பெங்களூரு வீரர் விராட் கோலி, பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பார்த்து வேண்டுமென்றே வெறுப்பேற்றும் வகையில் கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் இதற்கெல்லாம் தண்டனை கிடையாதா? என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார். குறிப்பாக திக்வேஷ் முதல் பயிற்சியாளர்கள் வரை அனைவருக்கும் அபராதம் போட்ட பி.சி.சி.ஐ-க்கு விராட் கோலி மட்டும் விதிவிலக்கா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

  • 23 April 2025 8:25 AM IST

    காஷ்மீர் தாக்குதல்: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் - ராகுல் காந்தி


    ராகுல் காந்தி தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா ஆகியோருடன் பேசினேன். நிலைமை குறித்த தற்போதைய விவரங்களை பெற்றேன்.

    பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர்களுக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • 23 April 2025 8:24 AM IST

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்


    காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எனது நண்பர் பிரதமர் நரேந்திரமோடி, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருப்பது, காயமடைந்திருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.

  • 23 April 2025 8:22 AM IST

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்.. தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடி ஆலோசனை


    பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டெல்லி விமானநிலையத்திலேயே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பயங்கரவாதத்தை ஒழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • 23 April 2025 8:20 AM IST

    அமலாக்கத்துறையின் சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

    டாஸ்மாக் விவகாரம் தொடர்பான வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ்சிங் வாதம் செய்தார். அவர், 'அமலாக்கத்துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை. மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும்?' என்று வாதிட்டார். அமலாக்கத்துறை தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

  • 23 April 2025 8:17 AM IST

    இன்றைய ராசிபலன் - 23.04.2025

    மேஷம்

    வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர். தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும்


1 More update

Next Story