இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
x
தினத்தந்தி 24 May 2025 9:15 AM IST (Updated: 24 May 2025 8:14 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 24 May 2025 10:48 AM IST

    தென்காசி குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கு இல்லாதபோதிலும், மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

  • 24 May 2025 10:15 AM IST

    கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.

  • 24 May 2025 9:59 AM IST

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,940க்கும், ஒரு சவரன் ரூ.71,520க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

  • 24 May 2025 9:34 AM IST

    தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வடக்கு திசையில் நகர்ந்து சென்றது. இந்நிலையில், அது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுப்பெற்று உள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து இன்றே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 28-ந்தேதி வரை மித அளவிலான மழைக்கு வாய்ப்புள்ளது.

  • 24 May 2025 9:16 AM IST

    டெல்லியில் 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் புறப்பட்டு சென்றுள்ளார்.

1 More update

Next Story