இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Jun 2025 3:49 PM IST
3 ஏரிகளில் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்க திட்டம்
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 24 Jun 2025 3:47 PM IST
ஜூலை 1 முதல் 3 வரை திமுக உறுப்பினர் சேர்க்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு
ஜூலை 1 முதல் 3 வரை உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடைபெற உள்ளன. ஜூலை 1இல் திமுக உறுப்பினர் சேர்க்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
- 24 Jun 2025 3:46 PM IST
அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது - அன்பில் மகேஸ்
பள்ளிக்கூடம் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் காமராஜர் சீருடையை கொண்டு வந்தார். பள்ளிகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பள்ளிகளுக்கு இந்து மதம் சார்ந்த அடையாளங்களுடன் செல்ல வேண்டும் என்ற அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
- 24 Jun 2025 2:37 PM IST
தமிழுக்கு ரூ.75 கோடி ஒதுக்கியபோது எங்கு சென்றீர்கள்? - அண்ணாமலை
2006 - 2014, 8 ஆண்டுகளில், திமுக அங்கம் வகித்த மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ரூ.675.36 கோடி. தமிழுக்கு வெறும் ரூ.75.05 கோடி மட்டுமே; அப்போது எங்கு சென்றீர்கள்? கடந்த ஆண்டு, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.11.68 கோடி செலவிட்டதே. அது எதற்காக என்று கூற முடியுமா? என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- 24 Jun 2025 2:34 PM IST
மோடியின் மவுனம் அரசியல் நம்பகத்தன்மைக்கு சேதம் - ஜெய்ராம் ரமேஷ்
காசா மீது இஸ்ரேல் நிகழ்த்திய இனப்படுகொலை தொடர்கிறது. 18 மாதங்களாக காசா மீது நடக்கும் கொடூரம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். காசா-இஸ்ரேல் போரில் மோடியின் மௌனம் இந்திய அரசியல் நம்பகத்தன்மைக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
- 24 Jun 2025 2:15 PM IST
3வது இடத்திற்கு முன்னேறிய ரிஷப் பண்ட்
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய விக்கெட் கீப்பர் வரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறினார் ரிஷப் பண்ட்
- 24 Jun 2025 2:10 PM IST
1 லட்சம் டன் பாஸ்மதி அரிசி தேக்கம்
ஈரான்-இஸ்ரேல் மோதலை தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பாஸ்மதி அரிசி சுமார் 1 லட்சம் டன் அளவிற்கு தேக்கம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஸ்மதி அரிசி ஏற்றப்பட்ட கப்பல்கள் குஜராத்தின் கண்ட்லா, முந்த்ரா துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
- 24 Jun 2025 1:21 PM IST
அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்கு முக்கியத்துவம்?
பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொடுக்கப்பட்டது போல் கனிமொழிக்கும் தனியறை ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக உயர்மட்ட பொறுப்பில் சில மாற்றம் செய்யப்படுவதாக செய்தி பரவி வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில் கனிமொழி கருணாநிதி எம்.பி-ஐ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர வைத்துள்ளார்.
- 24 Jun 2025 1:05 PM IST
திருச்செந்தூர் கோவிலில் தமிழிலேயே குடமுழுக்கு நடக்கவுள்ளது - தமிழக அரசு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழிலேயே குடமுழுக்கு நடக்கவுள்ளது. திருமுறை, திருப்புகழ், 64 ஓதுவார்கள் பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் தமிழில் நடக்கவுள்ளன. திருச்செந்தூர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அரசின் வாதத்தை எழுத்துப்பூர்வமாக பதில் மனுவாக தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
















