இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 March 2025 11:22 AM IST
ராமேஸ்வரம் பாம்பனில் புதிய ரெயில் பாலத்தை ஏப்ரல் 6ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியுள்ளார்.
- 26 March 2025 11:20 AM IST
நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், ராட்சத கிராணைட் கற்கள் ஏற்றி வந்த லாரியின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. சாலையிலும், சாலையோர பள்ளத்திலும் கிராணைட் கற்கள் விழுந்தன. லாரியின் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். கற்கள் விழுந்ததிலும் யாருக்கும் பாதிப்பு இல்லை.
- 26 March 2025 11:15 AM IST
கூட்டணி வேறு, கொள்கை வேறு, சந்தர்ப்ப சூழலுக்கேற்ப கூட்டணி மாறும் என்று அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 26 March 2025 10:38 AM IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,560க்கும், ஒரு கிராம் ரூ.8,195க்கும் விற்பனையாகிறது.
- 26 March 2025 9:59 AM IST
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
- 26 March 2025 9:58 AM IST
டெல்லியில் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது குறித்த கேள்விக்கு, சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பதில் எல்லாம் நன்மைக்கே என பதில் அளித்தார்.
- 26 March 2025 9:57 AM IST
சட்டப்பேரவை இன்றைய அலுவல்கள் தொடங்கின - உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்.
- 26 March 2025 9:21 AM IST
சென்னை, திநகர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையின் போது 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- 26 March 2025 9:19 AM IST
சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒரு கொள்ளையன் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.









