இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-05-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-05-2025
x
தினத்தந்தி 26 May 2025 9:16 AM IST (Updated: 27 May 2025 8:59 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 26 May 2025 8:05 PM IST

    ஓடுபாதையில் உரசி விமானம் தீ விபத்து

    ரஷியாவின் கிரேன்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அங்காரா ஏர்லைன்ஸ் விமானத்தின் முகப்பு ஓடுபாதையில் உரசி தீப்பிடித்தது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

  • யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
    26 May 2025 7:14 PM IST

    யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

    பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து ஹிசார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது மின்னணு சாதனங்களின் தடயவியல் சான்றுகளுக்குப் பிறகு, அவரின் மொபைல் போன் மற்றும் மடிக்கணினியிலிருந்து 12டிபி-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் தரவை மீட்டெடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

  • 26 May 2025 7:10 PM IST

    ஐ.பி.எல்.: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு

    ஜெய்ப்பூர்,

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டன. இருப்பினும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தின் முடிவு அவசியமாகும்.

    இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாசில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

  • இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
    26 May 2025 7:05 PM IST

    இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

    நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

  • நீலகிரிக்கு ரெட் அலர்ட் -  சுற்றுலா தலங்கள் மூடல்
    26 May 2025 7:00 PM IST

    நீலகிரிக்கு ரெட் அலர்ட் - சுற்றுலா தலங்கள் மூடல்

    கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொட்டபெட்டா காட்சி முனை, பைன் வனப்பகுதி, பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

  • 26 May 2025 6:57 PM IST

    சுப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகள் பெயரை பரிந்துரைத்த கொலிஜியம்

    கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அன்ஜரியா, கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிஸ்னோய், மும்பை ஐகோர்ட்டு நீதிபதி சந்துர்கர் ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

  • சென்னையில் அதிவேகமாக பைக் ஓட்டிய 10 இளைஞர்கள் கைது
    26 May 2025 6:51 PM IST

    சென்னையில் அதிவேகமாக பைக் ஓட்டிய 10 இளைஞர்கள் கைது

    இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட, சென்னையில் வார இறுதி நாட்களில் அதிவேகமாக பைக் ஓட்டிய 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 9 பைக்குகளை பறிமுதல் செய்து அண்ணாநகர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  • வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை  - வனத்துறை
    26 May 2025 6:04 PM IST

    "வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை" - வனத்துறை

    வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கி உள்ளனர் என்ற தகவல் தவறானது. வெள்ளியங்கிரி மேலே ஏறிய பக்தர்கள் மெதுவாக இறங்கி கொண்டுள்ளனர். வெள்ளியங்கிரி மலையில் வனத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. 

  • மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி சுட்டுக்கொலை
    26 May 2025 6:01 PM IST

    மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி சுட்டுக்கொலை

    ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி மணீஷ் யாதவ் சுட்டுக்கொல்லப்பட்டார். மணீஷ் யாதவ் தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். 10 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் குந்தன் கெர்வார் கைது செய்யப்பட்டார்.

  • முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணை
    26 May 2025 5:55 PM IST

    முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணை

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது.இன்னும் 3 அடிகளே எஞ்சியுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகளில் இருந்து வினாடிக்கு 18000 கனஅடி நீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர மக்கள் கவனமாக இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story