இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025


தினத்தந்தி 28 March 2025 9:23 AM IST (Updated: 28 March 2025 8:41 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 28 March 2025 10:29 AM IST

    இந்தியாவில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்கிறது. தொழில் துறைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக இந்தாண்டு பட்ஜெட்டில் மேலும் பல திட்டங்களை அறிவித்துள்ளோம்.

    சென்னையை உலக தரத்திலான நகரமாக உருவாக்க மாஸ்டர் ப்ளான் -3 திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு காலநிலை மாற்றம் மூலம் நிலைத்தன்மையான வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது மாற்றம் நிறைந்த பயணத்தில் தொழில் கூட்டமைப்புகளை தமிழக அரசு அன்போடு வரவேற்கிறது- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

  • 28 March 2025 10:28 AM IST

    எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பதிவு

     


  • 28 March 2025 9:53 AM IST

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்துள்ளது ஒரு சவரன் தங்கம் 66 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • 28 March 2025 9:51 AM IST

    "1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?" "வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை; மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்

  • 28 March 2025 9:26 AM IST

    தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை நாளை முதல் 31 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை 34-35 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்ச வெப்ப நிலை 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story