இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 Oct 2025 7:48 PM IST
கரையை கடக்க தொடங்கியது மோந்தா புயல்
வங்கக்கடலில் உருவான மோந்தா புயலின் முன் பகுதி தற்போது ஆந்திராவின் மசிலிப்பட்டினம் அருகே கரையை கடக்க தொடங்கியது மோந்தா புயல். அடுத்த 3 - 4 மணி நேரத்தில் மசிலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே தீவிரபுயலாக கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 - 110 கி.மீ வரை காற்று வீசக்கூடும். மசிலிப்பட்டினத்தில் மணிக்கு 68 கிலோ மீட்ட வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது.
- 28 Oct 2025 7:38 PM IST
மதுரை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தென் மாவட்ட சுற்றுப்பயணத்திற்காக மதுரை வந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். மதுரை விமான நிலையம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றிரவு கோவில்பட்டியில் திமுக அலுவலகத்தையும், கருணாநிதி சிலையையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். நாளை தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். நாளை மறுநாள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவும் திட்டம்.
- 28 Oct 2025 7:17 PM IST
கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு ஊக்கத்தொகை வழங்கிய மேயர் ப்ரியா
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகாவை பாராட்டி, சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சத்தை வழங்கினார் மேயர் ப்ரியா.
- 28 Oct 2025 7:11 PM IST
8-வது ஊதியக் குழுவை அமைத்து மத்திய அரசு அறிவிப்பு
அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 2026 ஜனவரி மாதத்திலிருந்து 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட உள்ளது.குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 28 Oct 2025 7:07 PM IST
12 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 12 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தமிழகத்தில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. தமிழக அரசு சார்பில் நவ.2-ல் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- 28 Oct 2025 6:53 PM IST
தவெக அன்றாடப் பணி - குழு அமைப்பு
தவெக அன்றாட பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட குழுவை நியமித்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அருண்ராஜ்,ராஜ் மோகன், மரிய வில்சன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
- 28 Oct 2025 5:21 PM IST
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற 2ம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 'பாகிஸ்தானிய தலீபான் குழு' ஆப்கானில் இயங்கி வருவதாக குற்றம்சாட்டி, பாக். ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.
- 28 Oct 2025 4:21 PM IST
மீண்டும் அதிகரித்த புயலின் வேகம்
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மோந்தா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த மோந்தா புயல் தற்போது மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 28 Oct 2025 4:17 PM IST
உத்தரவுக்கு தடை
அரசு கட்டடங்களில் நிகழ்ச்சிகள் நடத்த ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட தனியார் அமைப்புகள், முன் அனுமதி பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. சித்தராமையா அரசின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
- 28 Oct 2025 4:15 PM IST
விமானம் அருகே தீ விபத்து
டெல்லி விமான நிலையத்தில், விமானத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
















