இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 29 April 2025 10:02 AM IST
ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயம் - வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் மக்களுக்கு அதிகமாக கிடைக்கும் வகையில் ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை வழக்கமான அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.
- 29 April 2025 10:01 AM IST
சேலம், திருச்சி, தஞ்சாவூரில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சேலம்:-
சேலம் நகர கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கிச்சிப்பாளையம், நெத்திமேடு ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வால்மீகி தெரு, முகமதுபுறா தெரு. பழைய மார்க்கெட் பின்புறம், கருவாட்டு பாலம், கிச்சிப்பாளையம் மெயின் ரோடு, திருச்சி மெயின் ரோடு ஒரு பகுதி, புலிகுத்தி மெயின் ரோடு ஒருபகுதி, களரம்பட்டி மெயின்ரோடு ஒரு பகுதி. கஸ்தூரிபாய் தெரு, கரிமியா வளாகம், கடம்பூர் முனியப்பன் கோவில் தெரு, எஸ்.எம்.சி. காலனி, லட்சுமி நகர், சத்தியமூர்த்தி நகர், காந்தி மகான் தெரு. நாராயணா நகர், அச்சிராமன் தெரு, பழைய மார்க்கெட், பிள்ளையார் கோவில் தெரு, அண்ணா நகர் ஹவுசிங் போர்டு. நாட்டாமங்கலம் மெயின் ரோடு மற்றும் கரட்டூர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 29 April 2025 9:59 AM IST
வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்..? டெல்லி - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 18 ஆட்டங்களிலும், டெல்லி 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
- 29 April 2025 9:57 AM IST
அழகுக்காக நான் எதையும் செய்ய மாட்டேன்: ஏன் தெரியுமா? ரகுல் பிரீத் சிங்
சினிமாவில் அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பேட்டி ஒன்றில் ரகுல் பிரீத் சிங் கலந்து கொண்டார். அப்போது, அழகாக இருக்க வேண்டும் என்று நான் எதையும் செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதாவது, "நான் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. ஏனென்றால் கடவுள் எனக்கு அழகிய முகத்தை கொடுத்துள்ளார். அதேபோல யாராவது அழகாக காட்சியளிக்க அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அதில் தவறில்லை" என்று தெரிவித்துள்ளார்.
- 29 April 2025 9:54 AM IST
கனடா தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- லிபரல் கட்சி முன்னிலை
343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் துவக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. முடிவுகள் தெரியவரத்தொடங்கிய 196 தொகுதிகளில் லிபரல் கட்சி 107 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 79 இடங்களிலும், இதர இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளன.
- 29 April 2025 9:52 AM IST
பெண்கள் பாதுகாப்புக்கு களம் இறங்கும் 'ரோபோ' போலீஸ் - என்னென்ன வசதிகள்?
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் பொது இடங்கள், சில குற்ற நிகழ்வு இடங்களிலும் அவசர காவல் உதவிக்காக, பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக 'ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்" (ரோபோ போலீஸ்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- 29 April 2025 9:50 AM IST
ரிஷபம்
பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று தங்கள் வீட்டில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்













