இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Nov 2025 5:33 PM IST
திருப்பத்தூர் அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 8 பேர் பலி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சமத்துவபுரம் பகுதியில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.
- 30 Nov 2025 5:08 PM IST
50 சதவீத மக்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்களை நிரப்புவதில் சிரமம்
திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
எஸ்.ஐ.ஆர். படிவங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி. எஸ் ஐ ஆர் பணிகள் இன்னும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது அவை தீர்க்கப்படவில்லை. எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே கட்சி தி.மு.க தான். 50 சதவீத மக்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்களை நிரப்புவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர் பணிகளின்போது வழங்கப்படும் படிவங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.பீகார் தேர்தலில் வாக்களித்த நபர், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் படிவத்தை சமர்ப்பிக்கிறார். ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டுமா? என்ற குழப்பங்களுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை விளக்கமளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- 30 Nov 2025 4:48 PM IST
திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்க உள்ளதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளது. வேளாண்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்க உள்ளனர்.
- 30 Nov 2025 4:47 PM IST
எதிர்க்கட்சிகளை பிரசாரம் செய்ய விடாமல்... தம்பிதுரை குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளை பிரசாரம் செய்ய விடாமல் ஒடுக்கும் வேலையை செய்கிறது திமுக அரசு. கரூர் துயர சம்பவத்தை காரணம் காட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றம்சாட்டி உள்ளார்.
- 30 Nov 2025 3:58 PM IST
ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு
அடுத்த ஆண்டு ஆக. 1ம் தேதி வரை அன்புமணிதான் பாமகவின் தலைவர் என ராமதாஸ் தரப்புக்கு கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் போராட்டம் அறித்துள்ளார்.
- 30 Nov 2025 3:52 PM IST
எஸ்.ஐ.ஆர்.-ஐ எதிர்த்து குரல் எழுப்புவோம் - டி.ஆர்.பாலு
தொழிலாளர் சட்டம், வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
- 30 Nov 2025 3:33 PM IST
நாளை குளிர்கால கூட்டத்தொடர்
குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவங்கவுள்ள நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கிரண் ரிஜிஜு தலைமையிலான கூட்டத்தில் காங், திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளனர்.
- 30 Nov 2025 3:25 PM IST
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
காற்றின் வேகம் குறைந்ததால் 2 நாட்களுக்கு பிறகு தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- 30 Nov 2025 2:40 PM IST
டிட்வா புயல் - இலங்கையில் பலி எண்ணிக்கை உயர்வு
டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 193-ஆக உயர்ந்துள்ளது. 228 பேர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை முழுவதும் 9.68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,094 முகாம்களில் 1.47 லட்சம் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

















