இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 31 May 2025 1:26 PM IST
சென்னையில் கூடுதலாக மழைப்பொதிவு
சென்னையில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 129 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் 48.8 மி.மீ மழைப் பதிவான நிலையில், நடப்பாண்டில் 111.7மி.மீ மழை பெய்துள்ளது.
- 31 May 2025 12:55 PM IST
குமரி - மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்
தமிழகத்தில் மேற்கு அரபிக்கடல் பகுதியில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருகிறது விசைப்படகு மீனவர்கள் இன்று இரவுக்குள் கரை திரும்ப குமரி மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- 31 May 2025 12:53 PM IST
கோவில்களில் இலவச மாஸ்க் வழங்க திட்டம் - அமைச்சர் சேகர்பாபு
கொரோனா பரவல் எதிரொலியாக கோவில்களில் இலவசமாக முககவசம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
- 31 May 2025 12:30 PM IST
2026 தேர்தல் - வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அதிகாரிகளின் விவரங்களை அரசிதழில் வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
- 31 May 2025 12:28 PM IST
2ஆவது நாளாக அன்புமணி ஆலோசனை தொடக்கம்
பாமக நிர்வாகிகளோடு அன்புமணி 2ஆவது நாளாக நடத்தும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் 2ஆவது நாளாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது. கூட்டத்தில், தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் பங்கேற்றுள்ளார்.
- 31 May 2025 12:24 PM IST
கொரோனா பரவலால் கோவை அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் - கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்ளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
- 31 May 2025 11:42 AM IST
நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தும் கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 200 விநாடிகளில் வெற்றிகரமாக இலக்கை அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- 31 May 2025 11:41 AM IST
கொரோனா பரவலால் பெரிய அளவில் பாதிப்பில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவது நல்லது.கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் இருந்ததன் காரணத்தால் 2023 மே 5ம் தேதி வரை நெருக்கடி நிலை இருந்தது.
தற்போது பரவும் கொரோனா வீரியமில்லாதது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைபிடித்தால் போதுமானது. பதற்றம் வேண்டாம்.தற்போது பரவும் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 60 வயது முதியவருக்கு நீரழிவு உள்ளிட்ட இணை நோய்கள் இருந்துள்ளன.பொது இடங்களில் முகக்கவசம் அணிவந்து நல்லதே தவிர கட்டாயம் இல்லை
இவ்வாறு அவர் கூறினார்.
- 31 May 2025 11:25 AM IST
நவ திருப்பதி கோவில்களில் ஒன்றான தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் நம்மாழ்வார் அவதார வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.










