ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக சரிந்துள்ளது.

தர்மபுரி,

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பியதால், அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

குறிப்பாக, கர்நாடக மாநில அணைகளில் இருந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக சரிந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கும், பரிசல் இயக்கவும் நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 7 நாட்களுக்கு பிறகு தற்போது நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story