குற்றால அருவிகளில் 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றால அருவிகளில் 2வது நாளாக சுற்றுலா பயணிகள்  குளிக்க தடை
x
தினத்தந்தி 2 March 2025 10:13 AM IST (Updated: 3 March 2025 6:54 AM IST)
t-max-icont-min-icon

மழை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமாக ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள் உள்ளன. தமிழக்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு குற்றால சீசன் காலங்கள், மற்றும் அய்யப்ப சீசன் காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

மேலும் வார விடுமுறை, தொடர் விடுமுறை போன்ற நாட்களில் குற்றாலத்தில் நீர்வரத்து இருக்கும் போது, பொதுமக்கள் இங்கு மகிழ்ச்சியாக குளித்து செல்வர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் சமயங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கம்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது மழைபெய்து வருவதால் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீரின் அளவு சற்று குறைந்த நிலையிலும், குளிக்க விதிக்கப்பட்ட தடை 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.

1 More update

Next Story