கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால் கொடைக்கானலில் நிலவும் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு குவிந்து வருகின்றனர்.
கொடைக்கானல் நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மன்னவனூர் கிராமத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில் சூழல் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், மேல்மலை மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், வரும் ஏப்ரல் 1-ந்தேதி(நாளை) முதல் 4-ந்தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக மன்னவனூர் வனத்துறை அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






