ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து


ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
x

கபடி போட்டியில் இந்திய ஆடவர்- மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

சென்னை,

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி பஹ்ரைனில் நடைபெற்று வருகிறது. இதில் கபடி போட்டியில் இந்திய ஆடவர்- மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக துணை முதல்-அமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“பஹ்ரைனில் நடைபெற்ற 3-வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில், இந்திய கபடி அணி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றது அறிந்து மகிழ்ந்தோம்.

பெண்கள் அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தங்கை கார்த்திகாவும், ஆண்கள் அணியில் தம்பி அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை.

தம்பி அபினேஷ் தேனியில் உள்ள நமது SDAT விடுதியில் தங்கி பயிற்சி எடுத்தவர் என்பதும், தங்கை கார்த்திகா எளிய பின்புலத்தில் இருந்து புறப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு.

சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷை வாழ்த்தி மகிழ்கிறோம். இவர்கள் இருவரும் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கட்டும்!”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story