விசாகத் திருவிழா- தூத்துக்குடிக்கு இன்று உள்ளூர் விடுமுறை


விசாகத் திருவிழா- தூத்துக்குடிக்கு இன்று உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 9 Jun 2025 8:12 AM IST (Updated: 9 Jun 2025 8:14 AM IST)
t-max-icont-min-icon

விசாகத் திருவிழாவை ஒட்டி (இன்று) 9ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. பத்தாம் நாளான ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு, கோவிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது. தொடர்ந்து, ஜெயந்திநாதர் திருக்கோவிலிலிருந்து சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் சேர்கிறார். பிறகு அன்று மாலையில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், மகா தீபாராதனையாகி, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில், விசாகத் திருவிழாவை ஒட்டி (இன்று) 9ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story