தவெக மாநாட்டுக்காக குடிநீர் மேலாண்மைக் குழு அமைப்பு


தவெக மாநாட்டுக்காக குடிநீர் மேலாண்மைக் குழு அமைப்பு
x

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாட்டுக்காக குடிநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை,

த.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 200 அடி நீளமும், 60 அடி அகலம் கொண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடையும் அமைக்கப்படுகிறது. மாநாடு மாலை 3.15 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ,தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாட்டுக்காக குடிநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி மாநாட்டில் குடிநீர் கிடைக்காமல் தொண்டர்கள் சிரமப்பட்டனர் . இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story