வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்


வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x

வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசன தேவைக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தம் செய்யப்பட்டது.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டியது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வைகை அணையின் பூர்வீக பாசனப் பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்துக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக கடந்த வாரம் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் சரிவதை தடுக்கும் வகையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த வாரம் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று காலை 6 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

ஆனால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் 4 அடி குறைந்து 59 அடியாக சரிந்துள்ளது. அதே நேரத்தில் நீர்வரத்து கூடுதலாக உள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

1 More update

Next Story