விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? - உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவல்


விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? - உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவல்
x

திமுக அரசு, பெண்கள் முன்னேற்றத்திற்கான அரசாக உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்த முக்கிய தகவலையும் கூறினார். அதன் விபரம்;

“திமுக அரசு, பெண்கள் முன்னேற்றத்திற்கான அரசாக உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் கூறிய கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை கடும் நிதி நெருக்கடியிலும் திராவிட மாடல் அரசு வழங்கியது. இதுவரையில் தமிழகத்தில் கடந்த 26 மாதங்களில் 1.20 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் முதல் விடுபட்ட பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.” என்றார். துணை முதல்-அமைச்சர் கூறிய இந்த தகவல், புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

1 More update

Next Story