அரசியலில் இருந்து விலகலா? ரோஜா பரபரப்பு பேட்டி


அரசியலில் இருந்து விலகலா? ரோஜா பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 18 Jan 2026 3:37 PM IST (Updated: 18 Jan 2026 3:41 PM IST)
t-max-icont-min-icon

அரசியலுக்கு வருவதற்குமுன்பே அனைத்தையும் எதிர்கொண்டு துணிவோடுதான் வந்தேன் என்று ரோஜா கூறினார்.

நகரி,

பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் மந்திரியுமான நடிகை ரோஜா அரசியலில் இருந்து விலகுவதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இதுகுறிதது அவர் கூறியதாவது:-

நான் எப்போதெல்லாம் ஆந்திர மாநில அரசை கடுமையாக விமர்சிக்கிறேனோ அப்போதெல்லாம் என்னை கைது செய்யப்போகிறார்கள் என்று ஒரு செய்தியை பரவ விடுகிறார்கள். மேலும் கைதுக்கு பயந்து நான் அரசியலை விட்டு விலகப்போவதாகவும் கூறுகிறார்கள். கைது செய்யப்படுவதை பார்த்து நான் பயப்பட மாட்டேன். அரசியலுக்கு வருவதற்குமுன்பே அனைத்தையும் எதிர்கொண்டு துணிவோடுதான் வந்தேன்.

தற்போது சினிமா, டி.வி. நிகழ்ச்சிகளில் நான் அதிகமாக பங்கேற்கிறேன். அதனால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன் என்று நினைக்கிறார்கள். நான் சினிமாவில் நடித்தால் என்ன தவறு. அமைச்சர் ஆனதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி இருந்தேன். தற்போது கட்சிப்பதவி மட்டுமே இருப்பதால் தொடர்ந்து நடிக்கிறேன். துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் சினிமாவிலும் நடிக்கிறார். ஆனால் அவர் பற்றி யாரும் கருத்து தெரிவிப்பதில்லை. ஒரு பெண் என்பதால் விமர்சனம் செய்கிறார்கள்’இவ்வாறு ரோஜா தெரிவித்தார்.

1 More update

Next Story