பாப் பாடகிக்கு பாலியல் தொந்தரவு: ஆஸ்திரேலியா நாட்டவர் நாடு கடத்தல்

விளம்பர நிகழ்ச்சியில் கலந்த கொண்ட் பாப் பாடகி அரியானா கிராண்டியை பாலியர் தொந்தரவு செய்த வாலிபர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
பாப் பாடகிக்கு பாலியல் தொந்தரவு: ஆஸ்திரேலியா நாட்டவர் நாடு கடத்தல்
Published on

சிங்கப்பூர்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி அரியானா கிராண்டி (வயது 32). எவ்ரிடே, பை, பிளட்லைன் போன்ற பிரபல பாடல்களை பாடியுள்ளார். தற்போது ஹாலிவுட் சினிமா ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதொடர்பான விளம்பர நிகழ்ச்சி சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்டு மேடையில் தோன்றி ரசிகர்கள் முன்னிலையில் அரியானா கிராண்டி பேசினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் மேடையில் குதித்து பாடகி மீது பாய்ந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்தார். உடனே அங்கிருந்த போலீசார் நடிகையை மீட்டு வாலிபரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜான்சன் வென் (26) என்பது தெரிந்தது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை நாடு கடத்தியும் சிங்கப்பூருக்குள் நுழைய வாழ்நாள் தடைவிதித்தும் உத்தரவிடப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com