சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு

சூடானில் வடக்கு டார்பூர் மாகாணம் அல்-பஷேர் நகரை குறிவைத்து துணை ராணுவப்படையினர் தாக்குதல் நடத்தினர்.
சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு
Published on

கார்டூம்,

சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஆளும் அரசாங்கத்திற்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டு கிளர்ச்சியாக மாறியது. சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த தாக்குதலில் லட்சக்கணக்கானவர்கள் உயிழந்துள்ளனர்.

இந்த நிலையில் சூடானில் வடக்கு டார்பூர் மாகாணம் அல்-பஷேர் நகரை குறிவைத்து துணை ராணுவப்படையினர் தாக்குதல் நடத்தினர். அங்குள்ள முகாமை குறிவைத்து ஏவுகணைகள், வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் 13 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com