மாடல் அழகியை கொன்று சூட்கேசில் அடைத்த முன்னாள் காதலன் - ஆஸ்திரியாவில் பரபரப்பு


மாடல் அழகியை கொன்று சூட்கேசில் அடைத்த முன்னாள் காதலன் - ஆஸ்திரியாவில் பரபரப்பு
x

கொலைக்கு உதவியதாக வாலிபரின் தந்தை மற்றும் சகோதரனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியன்னா,

ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஸ்டெபானி பைபர். மாடல் அழகியான இவர் அழகுக்கலை நிபுணராகவும் இருந்தார். எனவே சமூகவலைதளங்களில் அவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி திடீரென அவர் மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் அவரது முன்னாள் காதலன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது காதலை கைவிட்ட ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும் ஸ்லோவேனியா எல்லை அருகே சூட்கேசில் வைத்து அவரை புதைத்ததாக கூறினார்.

இதனையடுத்து அந்த சூட்கேசை தோண்டி எடுத்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கு உதவியதாக வாலிபரின் தந்தை மற்றும் சகோதரனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story