சிலி நாட்டின் அதிபர் தேர்தலில் வலதுசாரி வேட்பாளர் ஜோஸ் அன்டோனியோ வெற்றி

Image Courtesy : @joseantoniokast
35 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டில் மீண்டும் வலதுசாரி கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
சாண்டியாகோ,
தென் அமெரிக்க நாடான சிலியில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் தொடங்கியது. இதன் முதல்கட்ட வாக்குப்பதிவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஜென்னெட் ஜாராவும், வலதுசாரியான குடியரசு கட்சி வேட்பாளர் ஜோஸ் அன்டோனியோ காஸ்டும் (வயது 59) வெற்றி பெற்றனர். இதனையடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்தநிலையில் 58.3 சதவீதம் வாக்குகளுடன் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன்மூலம் 35 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு மீண்டும் வலதுசாரி கட்சியின் ஆட்சி அமைய உள்ளது. புதிய அதிபராக தேர்வான ஜோஸ் அன்டோனியோவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






