தோல்வியுடன் விடைபெற்றார் ஜான் சீனா

தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ஜான் சீனா ரசிகர்களைக் கவர்ந்தார்.
தோல்வியுடன் விடைபெற்றார் ஜான் சீனா
Published on

கடந்த 2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமாகி, தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜான் சீனா. 'தி சூசைட் ஸ்குவாட்', 'ப்ரீலான்ஸ்' உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஜான் சீனாவின் என்ட்ரி இசை பலரது ரிங்டோனாக இருந்தது. இவர் WWE மல்யுத்த போட்டிகளில் 17 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

WWE ஜாம்பவான்களான ராக், டிரிபிள் எச், ரேண்டி ஆர்ட்டன், அண்டர்டேக்கர் உள்ளிட்டோருடன் ஜான் சீனா மோதியுள்ளார். 23 ஆண்டுகளாக WWE மல்யுத்த போட்டிகளில் அசத்தி வந்த ஜான் சீனா சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். அமெரிக்காவில் டிசம்பர் 13-ந்தேதி நடைபெறும் போட்டிதான் தனது கடைசி போட்டி என்று கூறியிருந்தார்.

இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 14) காலை 6.30 மணிக்கு இந்த போட்டியின் நேரலை ஒளிபரப்பானது. அதன்படி தனது கடைசி போட்டியில் ஜான் சீனா, கன்தர் உடன் மோதினார். இந்த போட்டியில் டேப் அவுட் முறையில் ஜான் சீனா தோல்வியை தழுவினார். இதைத் தொடர்ந்து தோல்வியுடன் ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவரை WWE நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் வழியனுப்பினர்.

அடுத்த கட்டமாக ஜான் சீனா தனது முழு கவனத்தையும் சினிமா துறையில் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com