உலக ஏழைகள் தினம் - போப் லியோ சிறப்பு பிரார்த்தனை

பிரார்த்தனை கூட்டத்தில் சகோதரத்துவம், ஒற்றுமை குறித்து போப் லியோ எடுத்துரைத்தார்.
ரோம்,
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ‘நற்செய்தியின் மையக்கருவாக வறுமை உள்ளது’ என்பதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ந்தேதியை உலக ஏழைகள் தினமாக அனுசரிக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு போப் பிரான்சிஸ் அறிவித்தார்.
அதன்படி இன்று ‘உலக ஏழைகள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் உலக ஏழைகள் தினத்திற்கான கருப்பொருள், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் வரும் “ஆண்டவரே, நீரே எனது நம்பிக்கை”(சங்கீதம் 71:5) என்ற வசனமாகும்.
இந்த நிலையில் உலக ஏழைகள் தினத்தை முன்னிட்டு, ரோம் நகரில் உள்ள வாடிகன் தேவாலயத்தில் போப் லியோ சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த பிரார்த்தனை கூட்டத்தில் சகோதரத்துவம், ஒற்றுமை குறித்து எடுத்துரைத்த போப் லியோ, கத்தோலிக்க திருச்சபை ஏழை எளிய மக்களின் தாய் என்று குறிப்பிட்டார்.






