20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம்; யூடியூப் தகவல்


20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம்; யூடியூப் தகவல்
x

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமாக யூடியூப் உள்ளது.

வாஷிங்டன்,

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் யூடியூப். இதில் பலர் வீடியோக்களை, பதிவேற்றம் செய்தும் பதிவிறக்கம் செய்தும் வருகின்றனர்.

யூடியூப் 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த ஆண்டின் ஏப்ரல் 23ம் தேதி யூடியூபில் முதல் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. ஸ்டீவ் சென், சந்த் ஹர்லி, ஜாவித் கரீம் ஆகியோரால் தொடங்கப்பட்ட யூடியூப் தற்போது உலகின் முன்னணி சமூகவலைதளமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், யூடியூப் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதில் இதுவரை 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story