மே.வங்காளத்தில் காலை 11 மணி நிலவரப்படி 33.56 சதவீத வாக்குகள் பதிவு
நாடு முழுவதும் முதற்கட்டமாக 102 தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா,
நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மக்கள் காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் காலை 11 மணி நிலவரப்படி 33.56 சதவீத வாக்குகள் பதவாகியுள்ளது. அதேபோல திரிபுரா- 34.54 சதவீதம், உத்தரபிரதேசம்- 25.20 சதவீதம், உத்தரகாண்ட் - 24.83 சதவீதம், பீகார்- 20.42 சதவீதம், சத்தீஷ்கார் -28.12 சதவீதம், அசாம்-27.22 சதவீதம், மத்திய பிரதேசம் -30.56 சதவீதம், மணிப்பூர்-28.19 சதவீதம், மராட்டியம்- 19.17 சதவீதம், ராஜஸ்தான் - 22.50 சதவீதம், மேகாலயா - 33.12 சதவீதம், நாகாலாந்து - 22.82 சதவீதம், ஜம்முகாஷ்மீர்- 22.60 சதவீதம், சிக்கிம்- 21.20 சதவீதம், அருணாசல பிரதேசம்- 18.74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.