பழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் பருகலாமா?


பழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் பருகலாமா?
x

தினமும் பழங்கள் சாப்பிட வேண்டும். அவை எந்த பழங்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். உடல் நலனுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் அவற்றுள் நிறைந்துள்ளன.

தொடர்ந்து பழங்கள் சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம், நீரிழிவு, புற்றுநோய் போன்ற அபாயங்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். பழங்கள் சாப்பிட்டதும் செய்யக்கூடாத விஷயம் ஒன்று இருக்கிறது. அது தண்ணீர் பருகக்கூடாது என்பதுதான். அதனை பொருட்படுத்தாமல் பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகுவது ஒருசில உடல் நலப்பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடும். என்னென்னெ பாதிப்புகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

* எல்லா வகை பழங்களிலும் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் அதிகம் உள்ளன. அவை செரிமானம் சீராக நடைபெறுவதற்கு உதவுகின்றன. உடல் உள் உறுப்புகளும் பல்வேறு வகையான செரிமான நொதிகளை உற்பத்தி செய்கின்றன. குறிப்பாக வயிற்றில் இருந்து உற்பத்தியாகும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவு பொருட்கள் எளிதாக செரிமானமாக உதவுகின்றன. ஆனால் பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது அந்த அமிலத்தின் செயல்திறனை குறைத்துவிடும். அதனால் செரிமானத்திற்கு இடையூறு ஏற்படும்.

* வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகம். அவை செரிமானம் ஆவதற்கு குடல் இயக்கங்கள் மென்மையாக நடைபெறும். அந்த நேரத்தில் தண்ணீர் பருகினால் செரிமானத்தின் செயல்பாடு அதிகரிக்கும். ஏற்கனவே வெள்ளரிக்காய், தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருக்கும் நிலையில் தண்ணீரையும் சேர்த்து பருகும்போது உடலில் சேரும் அதிக நீரை ஈடுசெய்வதற்காக வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

* பழங்களை சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகுவது செரிமான உறுப்புகளின் பி.எச். அளவுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். சாதாரணமாக வயிற்றில் உள்ள அமிலத்தின் பி.எச். அளவு 1.5 முதல் 3.5 வரை இருக்கும். பழங்களை சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகினால் அமிலத்தின் அளவை குறையச் செய்து செரிமானத்தை பலவீனமாக்கும்.

* பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகினால் செரிமானத்தின் வேகம் குறைய தொடங்கிவிடும். சில சமயங்களில் வயிற்றில் உள்ள உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

* பழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் பருகும்போது இரைப்பை நொதிகளின் செயல்பாடும் பாதிக்கப்படும். எந்த உணவை சாப்பிட்டாலும் அந்த உணவு செரிமானம் ஆவதற்கு போதுமான நொதிகள் உற்பத்தியாகவில்லை என்றால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

* செரிமானத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பழங்கள் சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் பருகுவது நல்லது.


Next Story