சண்டே ஸ்பெஷல்: சுவையான வெண்பூசணி மோர் குழம்பு செய்வது எப்படி..?


சண்டே ஸ்பெஷல்: சுவையான வெண்பூசணி மோர் குழம்பு செய்வது எப்படி..?
x

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் வெண்பூசணி மோர் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.

சுவையான வெண்பூசணி மோர் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

வெண்பூசணி - 400 கிராம்

தயிர் - அரை லிட்டர்

பச்சரிசி - ஒரு டீஸ்பூன்

துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

தேங்காய் - 3 சில் அளவு

பச்சை மிளகாய் - 3

சீரகம் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்

கடுகு - சிறிதளவு

உளுந்தம் பருப்பு - சிறிதளவு

சீரகம் - சிறிதளவு

வெந்தயம் - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 5

கருவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயப் பொடி - கால் டீஸ்பூன்

செய்முறை

பச்சரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊர வைக்கவும். வெண்பூசணியை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி, அதை ஒரு கடாயில் போட்டு நீர் ஊற்றி வேகவிடவும். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூளும், தேவையான அளவு உப்பும் சேர்க்கவும்.

தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், ஊறவைத்த பச்சரிசி - துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். அதை வெந்து கொண்டிருக்கும் வெண்பூசணியுடன் சேர்க்கவும். 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும். நன்கு கலக்கி வைத்த அரை லிட்டர் தயிரையும் சேர்க்கவும். தயிர் சேர்த்த பிறகு கொதிக்கவிடக்கூடாது. நுரை வந்தவுடன் இறக்கிவைக்கவும்.

அடுத்து, தேங்காய் எண்ணெய்யில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், சின்ன வெங்காயம், கருவேப்பிலை, பெருங்காயப்பொடி ஆகியவற்றை சேர்த்து தாளித்து வெண்பூசணி குழம்புடன் சேர்க்கவும். மணமணக்கும், சுவையான வெண்பூசணி குழம்பு தயார்.

1 More update

Next Story