சண்டே ஸ்பெஷல்: தக்காளி ரசம், மிளகு ரசம் செய்வது எப்படி..?


சண்டே ஸ்பெஷல்: தக்காளி ரசம், மிளகு ரசம் செய்வது எப்படி..?
x
தினத்தந்தி 5 Oct 2025 6:43 AM IST (Updated: 12 Oct 2025 7:09 AM IST)
t-max-icont-min-icon

பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் இந்த வாரம் தக்காளி ரசம், மிளகு ரசம் ஆகியவை எப்படி செய்வது? என்பதை பார்ப்போம்.

தக்காளி ரசம்

தேவையான பொருட்கள்

தக்காளி - ¼ கிலோ

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

பூண்டு - 10 பல் அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயம் - ½ டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

தக்காளியை பாத்திரத்தில் போட்டு 3 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக பிழிந்து எடுக்கவும். தோலை நீக்கி விடவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், மிளகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். பிழிந்து வைத்துள்ள தக்காளி சாற்றை சேர்த்து கொதி வந்தவுடன், நன்றாக பொடித்த சீரகம், மிளகு, பூண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். நுரை ததும்பியதும் இறக்கிவிடவும். கொதிக்க விடக்கூடாது. சுவையான தக்காளி ரசம் ரெடி.

மிளகு ரசம்

தேவையான பொருட்கள்

மிளகு - 2 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

கொத்தமல்லி விதை - ½ ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

புளி - சிறிதளவு

தக்காளி - 1

மஞ்சள் தூள் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிளகு, சீரகம், மிளகாய், கொத்தமல்லி விதை ஆகியவற்றை ஒரு கடாயில் போட்டு வறுத்துக்கொள்ளவும். ஆறிய பிறகு அதை மிக்சி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். புளியை கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து, புளி கரைசல், மிக்சி ஜாரில் அரைத்து வைத்தது, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் பொடி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து சூடாக்கவும். நுரை ததும்பியவுடன் இறக்கிவிடவும். ருசியான மிளகு ரசம் ரெடி.

1 More update

Next Story