அபூர்வ உயிரினங்கள் `வாழும்' செஸ்டர் உயிரியல் பூங்கா..!


அபூர்வ உயிரினங்கள் `வாழும் செஸ்டர் உயிரியல் பூங்கா..!
x

உலகின் தலைசிறந்த மூன்றாவது உயிரியல் பூங்கா செஸ்டர். இங்கிலாந்தில் செசையர் கவுண்டியில் சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது, இந்தப் பூங்கா. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் சுமார் 8 கோடி பேர் செஸ்டரைச் சுற்றிப்பார்க்க வந்திருக்கின்றனர்.

ஏனெனில், அழிந்துபோன உயிரினங்களான டைனோசர், ராட்சத பாம்பு, கூரிய பற்களைக்கொண்ட புலி போன்றவற்றை 'அனிமேட்ரானிக்' தொழில்நுட்பத்தில் உயிர்த்தெழச் செய்திருக்கிறார்கள்.

ஆம்..! அரிய உயிரினங்களை தத்ரூப செயற்கை மாதிரியில் உருவாக்கி, அதை ரோபோ தொழில்நுட்பம் கொண்டு இயக்குகிறார்கள். நடப்பது, அசைவது, குரல் எழுப்புவது... என உயிருள்ள உயிரினங்களை போலவே, அவை செயல்பட்டு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

''இந்தக் கண்காட்சி மூலம் பார்வையாளர்களுக்கு அழிந்துபோன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கும். இதை, கல்வி நோக்கில்தான் உருவாக்கினோம். ஆனால், மக்கள் இதை பொழுதுபோக்கான விஷயமாக கருத ஆரம்பித்துவிட்டனர். உயிரியல் பூங்காக்களை தாண்டி, பல பொழுதுபோக்கு பூங்காக்களிலும் இவை இடம்பிடித்திருக்கின்றன'' என்று வருத்தப் படுகிறார்கள், பூங்காவின் நிர்வாகிகள்.


Next Story