இந்திய அணிக்கு அபராதம்.. காரணம் என்ன..?


இந்திய அணிக்கு அபராதம்.. காரணம் என்ன..?
x

image courtesy:ICC

தினத்தந்தி 8 Dec 2025 3:11 PM IST (Updated: 8 Dec 2025 3:28 PM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

துபாய்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் மற்றும் 3-வது போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது போட்டியில் மட்டுமே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

ராய்ப்பூரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. கெய்க்வாட் (105 ரன்கள்), விராட் கோலி (102 ரன்) சதம் விளாசினர்.

பின்னர் 359 ரன் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 110 ரன்கள் விளாசினார்.

இந்த போட்டியில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. 2 ஓவர்கள் தாமதமாக வீசியது. இது ஐ.சி.சி. விதி 2.22-ஐ மீறிய குற்றமாகும்.

இதன் காரணமாக அந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்து வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story