2-வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்


2-வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
x

2-வது ஒரு நாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடக்கிறது.

மெக்காய்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. கெய்ன்ஸ் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 98 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மெக்காய் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

முதல் ஆட்டத்தில் மார்க்ரம், கேப்டன் பவுமா, மேத்யூ பிரீட்ஸ்கே ஆகியோரது அரைசதமும், சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜின் 5 விக்கெட் ஜாலமும் தென்ஆப்பிரிக்காவுக்கு எளிதில் வெற்றியை பெற்றுத்தந்தன. அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் வரிந்து கட்டுவார்கள். இதிலும் வெற்றி கண்டால், தொடர்ந்து 5-வது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுவார்கள்.

ஆஸ்திரேலிய அணியில், முதல் ஆட்டத்தில் கேப்டன் மிட்செல் மார்ஷ் (88 ரன்) தவிர மற்றவர்கள் சொதப்பினர். குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய லபுஸ்சேன் ஒரு ரன்னில் வீழ்ந்தார். அவர் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். தொடரை இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

1 More update

Next Story