3-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி


3-வது  ஒருநாள் போட்டி:   தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி
x

இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ராஜ்கோட்,

இந்தியா ‘ஏ’- தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி 6 விக்கெட்டுக்கு 325 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் லுஹான் டி பிரிட்டோரியஸ் (123 ரன்), ரிவால்டோ மூன்சேமி (104 ரன்) சதம் அடித்தனர்.

இந்திய தரப்பில் கலீல் அகமது, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இந்திய ‘ஏ’ அணி 49.1 ஓவர்களில் 252 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 73 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இஷான் கிஷன் (53 ரன்), ஆயுஷ் பதோனி (66 ரன்) அரைசதம் அடித்தனர். முதல் 2 ஆட்டங்களில் வென்று இருந்த இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

1 More update

Next Story